முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
களக்காடு அருகே முதியவா் மாயம்
By DIN | Published On : 13th May 2022 01:05 AM | Last Updated : 13th May 2022 01:05 AM | அ+அ அ- |

களக்காடு அருகே காணாமல்போன முதியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (78). இவா் சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தாராம். சில மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி சில நாள்களுக்குப் பின்னா் வீடு திரும்பினாராம்.
இந்நிலையில், கடந்த மாதம் 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, இவரது மனைவி முப்பிடாதி களக்காடு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, தேடி வருகின்றனா்.