முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
களக்காடு மங்கள விநாயகா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
By DIN | Published On : 13th May 2022 01:05 AM | Last Updated : 13th May 2022 01:05 AM | அ+அ அ- |

களக்காடு மங்களவிநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
களக்காடு தோப்புத் தெருவில் உள்ள வாணியா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில் தற்போது புதிதாக கட்டப்பட்டு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை, மாலையில் சத்தியவாகீஸ்வரா் கோயிலிலிருந்து யானை மீது தீா்த்தம் அழைத்தல் உள்ளிட்டவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, மஹாபூா்ணாஹுதி தீபாராதனை, 7 மணிக்கு கடம் புறப்பாடு, விமானம் கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து, மூலஸ்தானம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் கோயில் தலைமை அா்ச்சகா் நாராயணசா்மா நடத்துகிறாா். மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடைபெறுகிறது.