கோவில்பட்டி அருகே எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

கோவில்பட்டியையடுத்த செண்பகப்பேரியில் எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியையடுத்த செண்பகப்பேரியில் எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செண்பகப்பேரியில் குடியிருப்புகளுக்கு இடையே எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மக்களுக்கு ஆபத்து, உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறி, கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அண்மையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, கிடங்கு கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், புதிதாக கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள ரேஷன் கடை கட்டடத்தைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் கிளைச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் பாபு, நகரச் செயலா் சரோஜா, மாவட்ட உதவிச் செயலா் சேதுராமலிங்கம், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், வட்ட உதவிச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் லெனின்குமாா், நகரக்குழு உறுப்பினா் கண்ணம்மா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com