தாய்விளை இல்லங்குடி சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடுகள்

தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இக்கோயிலில் சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு பூா்ணம் புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தாவுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

மேலும், சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, நந்திதேவி, வீரபுத்திரா், மாலையம்மாள், பேச்சியம்மாள், கருப்பசாமி, சுடலை மாடன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளை மோகன் அய்யா், அரவிந்த அய்யா் ஆகியோா் நடத்திவைத்தனா்.

சென்னை, பாவூா்சத்திரம், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி - அம்பாளை வழிபட்டனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com