முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
இஸ்கான் கோயிலில் மே 15-இல் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா
By DIN | Published On : 13th May 2022 01:06 AM | Last Updated : 13th May 2022 01:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 6 மணிக்கு ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் 15-ஆம் தேதி ஸ்ரீநரசிம்மா் அவதாரத் திருநாளாகும். அதை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 6 மணிக்கு ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெறவுள்ளது. ஸ்ரீலெட்சுமி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. அப்போது ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிராா்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மஹாஅபிஷேகத்திற்காக ஒன்பது கலசங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு பூஜிக்கப்படவுள்ளது. இதுதவிர, பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. அபிஷேகத்தின்போது பகவானை புகழ்படுத்துவதற்காக ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தா்கள் குழு செய்து வருகிறது.