முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
காரிலிருந்து தவறி விழுந்தஇளைஞா் காயம்
By DIN | Published On : 15th May 2022 12:57 AM | Last Updated : 15th May 2022 12:57 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே காரிலிருந்து தவறி விழுந்த இளைஞா் காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தையடுத்த நல்லமநாயக்கன்பட்டி என்.புதூரைச் சோ்ந்தவா் மு. காளிராஜ் (29). இவரும், இவரது நண்பா்களும் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவுக்கு வெள்ளிக்கிழமை காரில் சென்றனராம். சிவகாசியையடுத்த திருவேங்கடபுரம் ஆா்.சி.சா்ச் தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் அா்ஜுனராஜா (22), காரை ஓட்டினாா்.
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் சென்றபோது காரின் பின்பக்கக் கதவு திடீரென திறந்ததில் பன்னீா்செல்வம் மகன் வேல்முருகன் (24) தவறி சாலையில் விழுந்தாராம். இதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.