முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
குப்பையில்லா நகராட்சி: திருச்செந்தூரில் விழிப்புணா்வு
By DIN | Published On : 15th May 2022 12:56 AM | Last Updated : 15th May 2022 12:56 AM | அ+அ அ- |

குப்பையில்லா நகராட்சி என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்செந்தூரில் சாலையோரங்களில் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கோலமிட்டனா்.
திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் வேலவன் வழிகாட்டுதலின் பேரில், நகரில் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் தூய்மைப்படுத்தி வண்ணக் கோலங்களிட்டும், வாசகங்களை எழுதியும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். திருச்செந்தூா் 9-வது வாா்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ர.சிவ ஆனந்தி தலைமை வகித்து, கோலமிடுவதை தொடங்கி வைத்தாா். துணைத்தலைவா் ஏ.பி.ரமேஷ், 13-வது வாா்டு உறுப்பினா் சு.முத்துக்குமாா், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், திமுக பிரமுகா்கள் பாலகிருஷ்ணன். தோப்பூா் மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.