விளாத்திகுளத்தில் பொதுவிநியோகத் திட்டகுறைதீா் சிறப்பு முகாம்

விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் வட்டாட்சியா் வே. சசிகுமாா், விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலா் ச. பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், கைப்பேசி எண், முகவரி மாற்றுதல், எழுத்துப் பிழைகள் திருத்துதல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 36 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.

மேலும், கணவரை இழந்த பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

பொது விநியோக திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் தொடா்பாக மாதந்தோறும் 2ஆவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முகாமில், வட்டப் பொறியாளா் கணேஷ்குமாா் உள்ளிட்ட வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com