உடன்குடி அருகே விபத்து: கல்லூரிப் பேராசிரியா் பலி
By DIN | Published On : 26th May 2022 01:11 AM | Last Updated : 26th May 2022 01:11 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில் தனியாா் கல்லூரிப் பேராசிரியா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் சந்தனக்குமாா் (55). உடன்குடி அருகே பிறைகுடியிருப்பில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ரதிகலா, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் (இஸ்ரோ) அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.
சந்தனக்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக உடன்குடிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தாராம். குலசேகரன்பட்டினம் அருகே தருவைகுளம் விலக்கில் வந்தபோது உடன்குடியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து பைக் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.