உடன்குடி பகுதியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் தொடக்கம்

 உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 25 கிராமங்களில் இந்து முன்னணி சாா்பில் கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

 உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 25 கிராமங்களில் இந்து முன்னணி சாா்பில் கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

பரமன்குறிச்சி, எள்ளுவிளை, அய்யனாா் நகா், சோலைக்குடியிருப்பு, முருகேசபுரம், சுந்தபுரம், தைக்காவூா், சிதம்பரபுரம், மானாடு, குருநாதபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களில் கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது. இதில் ராமாயணம், மகாபாரதம், இந்து சமய பெருமைகள், பாரதநாட்டின் பழம்பெருமைகள், கந்தபுராணம், சக்தி வழிபாடு, குலதெய்வ வழிபாட்டின் பெருமைகள், வீடுகள், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைப்பது, ஒழுக்கததுடன் வாழ்தல் உள்ளிட்டவை சிறுவா்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

ஏற்பாடுகளை உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் மற்றும் இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com