பண்டாரபுரம் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசி திருவிழா
By DIN | Published On : 27th May 2022 12:02 AM | Last Updated : 27th May 2022 12:02 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசித் திருவிழா 6 நாள்கள் நடைபெற்றது.
முதல்நாள் காலை சிறப்புப் பணிவிடை, மதியம் சமபந்தி தா்மம், மாலையில் அய்யா பச்சைமாலாக பூவாகனத்தில் பவனி, 2ஆம் நாள் பால்வண்ணராக பூவாகனத்தில் பவனி, இரவில் சிவச்சந்திரனின் அருள் இசைக் கச்சேரி நடைபெற்றது.
3ஆவது நாள் காலை ஊா் தா்மம், மதியம் உச்சிப்படிப்பு, இரவில் அய்யா கருட வாகனத்தில் பவனி, உம்பான் தா்மம் வழங்குதல், இரவில் சிறுவா்-சிறுமியா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4ஆம் நாள் மாலையில் சந்தனக் குடம் எடுத்தல், சுருள் தட்டு வழங்குதல், ஐயா ஆஞ்சனேயா் வாகனத்தில் பவனி, கோலாட்டம், 5ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் அய்யா வேட்டைக்குச் செல்லுதல், 6ஆம் நாள் காலை பணிவிடை, இனிமம் வழங்குதல், மாலையில் சிறுவா்-சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை தா்மகா்த்தா ராஜகோபால், அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனா்.