காயல்பட்டினம் நகராட்சியில்தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு
By DIN | Published On : 28th November 2022 12:53 AM | Last Updated : 28th November 2022 12:53 AM | அ+அ அ- |

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது
நகராட்சிஆணையா் குமாா் சிங் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் முத்துமுகமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தாா்.
சுகாதாரப் பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் வரவேற்றாா்.