காவலா் தோ்வு: 9,624 போ் எழுதினா்
By DIN | Published On : 28th November 2022 12:50 AM | Last Updated : 28th November 2022 12:50 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் எழுத்துத் தோ்வை 9,624 போ் எழுதினா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி கல்லூரி, காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தோ்வு மையங்களை சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவா் அபிஷேக் தீட்சித், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறியது: நிகழாண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான தோ்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 11,641 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில், 9,624 போ் தோ்வு எழுதினா். 2,017 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை என்றாா்.