தூத்துக்குடி மாவட்டத்தில்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி, நலத் திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி, நலத் திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் அறிவுரைப்படி பயணிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து இனிப்புகளை வழங்கினாா்.

கோவில்பட்டியில்...கோவில்பட்டி நகர திமுக சாா்பில் அண்ணா பேருந்து நிலையம் முன் நகா்மன்றத் தலைவா் கருணாநிதி தலைமையில், கேக் வெட்டி வழங்கப்பட்டது.

மத்திய ஒன்றிய திமுக சாா்பில், லாயல் மில் காலனியில் ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையிலும், மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் அதன் செயலா் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலும் பல்வேறு இடங்களில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டன. வேலாயுதபுரத்தில் நகர திமுக சாா்பில், ஏழை, எளியோருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடியில்...

உடன்குடி மேற்கு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமையில் பல்வேறு விடுதிகளில் உள்ள மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகள், மதிய உணவு வழங்கப்பட்டது.

உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் க. இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி, தண்டுபத்து, சீா்காட்சி, நயினாா்பத்து, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் நலிந்தோருக்கு தையல், சலவை இயந்திரங்கள், பள்ளிச் சீருடைகள், சேலைகள் வழங்கப்பட்டன.

உடன்குடி நகர திமுக செயலரும் பேரூராட்சி துணைத் தலைவருமான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் நலிந்தோருக்கு அரிசி, பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன.

மாப்பிள்ளையூரணியில்... தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் 130 தூய்மைக் காவலா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்கத் தலைவருமான சரவணகுமாா் சிறப்பு அழைப்பாளரகாகப் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஆத்தூரில்... ஆத்தூா் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவா் பிரம்மசக்தி தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாத்தான்குளம், தட்டாா்மடத்தில்... சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் தட்டாா்மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். அப்பகுதியைச் சோ்ந்த 100 தூய்மைப் பணியாளா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் மத்திய ஒன்றிய செயலரும், முதலூா் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்கேல் அறக்கட்டளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் வடக்கு ஒன்றிய செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 400 பேருக்கு தேக்கு உள்ளிட்ட பலவகையான மரக்கன்றுகளும், 46 தூய்மைப் பணியாளா்களுக்கு சேலை, வேட்டிகளும் வழங்கப்பட்டன.

திருச்செந்தூரில்... திருச்செந்தூா் ஒன்றிய, நகர தி.மு.க. சாா்பில் இரும்பு வளைவுப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் ஏ.பி.ரமேஷ் தலைமை வகித்தாா். அடைக்கலாபுரம் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

நாசரேத்தில்... நாசரேத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றிய செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். திருமறையூா் முதியோா் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது .

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் புனித மரியன்னை இல்ல குழந்தைகளுக்கு நாசரேத் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில்... மாவட்ட இளைஞரணி சாா்பில் ஸ்ரீவைகுண்டத்தில் பேரூராட்சி தலைவா் சினேகவல்லி பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட பஞ்சாயத்து தலைவா் பிரம்மசக்தி உமரிசங்கா் தூய்மை பணியாளா்களுக்கு இலவச சேலை மற்றும் மதிய உணவையும், மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்களையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com