‘அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்’
By DIN | Published On : 19th October 2022 01:54 AM | Last Updated : 19th October 2022 01:54 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வியாழக்கிழமை (அக். 20) மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடத்தப்படும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1986 அக்டோபா் 20ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி, வியாழக்கிழமை (அக். 20) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுத்தம் சுகாதாரம் என்பதற்கேற்ப சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் காலை 6 முதல் 9 மணிவரை தூய்மை செய்யவேண்டும். அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களையும் அழகுபடுத்த வேண்டும். மேலும், அரசு அலுவலகங்களில் காலை 10 முதல் மதியம் 1 மணிவரை மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற வேண்டும்.
பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். அவற்றுக்கு 2 வாரங்களில் தீா்வு கண்டு, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நவம்பரில் நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை சுத்தமாக வைத்து, மரக்கன்று நட வேண்டும் என்றாா் அவா்.