மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், கோவில்பட்டி நகராட்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டு பகுதிகளிலும் கை, கால் முடக்கத்தால் பாதிக்கப்பட்டோா், முதியோா் உள்ளிட்ட மருத்துவமனைக்குச் செல்ல முடியாதோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க ஏதுவாக, மருத்துவக் குழுவினருடன் உள்ள வாகனத்தை நகா்மன்றத் தலைவா் கருணாநிதி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
ஆணையா் ராஜாராம், சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் வள்ளிராஜ், காஜா நஜ்முதீன், முருகன், வருவாய் ஆய்வாளா் பிரேம்குமாா், மருத்துவா் விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.