வில்லிசேரி அருகேமூதாட்டி சடலம் மீட்பு
By DIN | Published On : 03rd September 2022 12:39 AM | Last Updated : 03rd September 2022 12:39 AM | அ+அ அ- |

கயத்தாறை அடுத்த வில்லிசேரி அருகே தனியாா் நிலத்தில் மூதாட்டி சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
வில்லிசேரி சாய்பாபா கோயிலுக்கு வடக்கே உள்ள தனியாா் நிலத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இறந்து கிடந்தாா். உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சண்முகபிரியா புகாா் அளித்தாராம்.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆரஞ்சு நிறத்தில் ஊதா-பச்சை வண்ணச் சேலையும், சிவப்பு கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்த அந்த மூதாட்டி, எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.