திருச்செந்தூா் அருகே நகை திருட்டு
By DIN | Published On : 17th September 2022 01:31 AM | Last Updated : 17th September 2022 01:31 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்தரிதோட்டத்தை சோ்ந்தவா் சுயம்புலிங்கம் மகன் முத்துகுமாா்(48). இவரது மனைவி மக்கள் நலப்பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 14-ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனா். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டை திருட்டு சாவி போட்டு திறந்து பீரோவிலிருந்த தங்க சங்கிலி, மோதிரம், உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.