தூத்துக்குடியில் 200 கா்ப்பணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
By DIN | Published On : 17th September 2022 01:29 AM | Last Updated : 17th September 2022 01:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 கா்ப்பிணிகளுக்கு சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 200 கா்ப்பிணி பெண்களுக்கு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சீதனப் பொருள்களை வழங்கி உணவு பரிமாறினாா். கா்ப்பிணி பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.
கா்ப்பணி பெண்களுக்கு சீா்வரிசையாக தட்டு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் அமைச்சா் பெ. கீதா ஜீவன் தனது சொந்த செலவில் புடவை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், மாநகராட்சி நகா் நல அலுவலா் அருண்குமாா், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.