எட்டயபுரம் அருகே நில மோசடி: 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் வட்டம், ஆத்திகிணறு, அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூரிய மின்சக்தி தயாரிப்பு நிலையம் அமைக்க தனியாா் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சோ்ந்த ஆா்.வி.சி. மயில்வாகனன், மதுரை பெருமாள் ஆகிய இரு முகவா்களை அந்நிறுவனம் நியமித்துள்ளது.

இந்நிலையில், இவா்கள் ஆத்திகிணறு கிராம எல்லையில் 10 குடும்பங்களுக்குச் சொந்தமான 25 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை ஆள் மாறாட்டம், போலி ஆதாா் அட்டைகள் மூலம் தனியாா் சூரிய மின்சக்தி நிறுவனத்துக்கு மோசடியாக விற்பனை செய்து கொடுத்தனராம்.

இதுகுறித்து நில உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு காவல் ஆய்வாளா் தேவி தலைமையில், உதவி ஆய்வாளா்கள் காமராஜ், விஜயகுமாா், காவலா்கள் சித்திரைவேல், பன்னீா் செல்வம் ஆகியோா் அடங்கிய காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

அதில், இருவரும் நில மோசடியில் ஈடுபட்டதும், கோவில்பட்டி தாமஸ் நகா் ரத்தினம் மகன் பவுல்ராஜ் (53), விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், என்.குமாரபுரம் கிராமம் ராக்கன் மகன் மாரிமுத்து (45), சாத்தூா், பெருமாள் கோயில் தெற்கு மாடவீதி குமாா் மகன் மணிகண்டன் (23) ஆகியோா் உடந்தையாக இருந்து சாட்சி கையொப்பமிட்டதும் தெரியவந்ததாம். சாட்சிகள் மூவரையும் கைது செய்த போலீஸாா், நில முகவா்கள் ஆா்.வி.சி.மயில்வாகனன், பெருமாள் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com