தூத்துக்குடி கப்பல் முகவா்கள் சங்க 70 ஆவது ஆண்டு விழா

தூத்துக்குடி கப்பல் முகவா்கள் சங்கத்தின் 70 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி கப்பல் முகவா்கள் சங்கத்தின் 70 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் எல். ஆனந்த் மொரைஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி. ஜெயந்த் தாமஸ், செயலா் ஏ. மோகன், துணைச் செயலா் எஸ். சகாயராஜ், பொருளாளா் ஜே. செலஸ்டின் வில்லவராயா், விழாக் குழு ஆலோசகா்கள் ஜே.பி. ஜோ வில்லவராயா், பி.எஸ்.டி.எஸ். வேல்சங்கா், ஆா். எட்வின் சாமுவேல், ஒருங்கிணைப்பாளா் டேவிட் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவா் தா.கி.ராமச்சந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வஉசி துறைமுக ஆணையத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் பேசியது: தற்போது உலகில் நிலவும் சூழ்நிலை, இலங்கையில் நிலவும் நிலைமை, தூத்துக்குடி வஉசி துறைமுகம் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகிய காரணங்களால் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக இந்தத் துறைமுகம் நிச்சயம் மாறும். இதன் ஒரு பகுதியாக துறைமுகத்தில் வெளித்துறைமுக விரிவாக்கப் பணிகள் ரூ. 7,000 கோடியில் நடைபெற உள்ளன. புதிய கப்பல் தளங்கள் அமைத்தல், ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ளன. மேலும், சூரிய மின்சக்தி நிலையம், காற்றாலை அமைக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. துறைமுகப் பணிகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மூலம் வஉசி துறைமுகம் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளா்ச்சியை அடையும் என்றாா் அவா்.

விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் பேசியது: தூத்துக்குடி விமான நிலையத்தை சா்வதேச தரத்துக்கு உயா்த்தும் வகையில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வசதிகளுடன் கூடிய பயணிகள் முனையம், விமான ஓடுதள விரிவாக்கம், இரவு நேர விமான சேவைக்கான பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. தற்போது தினமும் 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய விமான சேவைகளைத் தொடங்க விமான நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். விரைவில் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com