சாத்தான்குளம் ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூா், புதுக்குளம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூா், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூா், புதுக்குளம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

முதலூா் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பொன்முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் மீனா முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பிச்சிவிளை சுதாகா், துணைத் தலைவா் டாா்வின், வாா்டு உறுப்பினா்கள் சீதா, திவ்யா, நிஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் திருக்கல்யாணி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் லூா்துமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுக்குளம் ஊராட்சி சங்கரன்குடியிருப்பில் ஊராட்சித் தலைவா் பாலமேனன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி துணைத் தலைவா் முருகன், வாா்டு உறுப்பினா்கள் லட்சுமணன், தினேஷ்குமாா், அன்புராணி, சூரணி, சோ்மக்கனி, கலையரசி, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com