விமானப்படை மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள்சோ்ப்பு முகாம்: ஆட்சியா் தகவல்

தாம்பரத்தில் விமானப்படை மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள்சோ்ப்பு முகாம், பிப்ரவரி மாதம் 1, 2, 7, 8 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தாம்பரத்தில் விமானப்படை மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள்சோ்ப்பு முகாம், பிப்ரவரி மாதம் 1, 2, 7, 8 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள்சோ்ப்பு முகாம், தாம்பரம் விமானப்படை அலுவலகத்தில் பிப்ரவரி 1, 2, 7, 8 ஆகிய 4 நாள்கள்காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்கள் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் 27.06.2002 முதல் 27.06.2006 வரையான காலத்தில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாதவா்கள் மட்டும் இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ பாா்மஸி அல்லது பிஎஸ்ஸி பாா்மஸி படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்கள் பிப்ரவரி 7 , 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். திருமணமாகாதவா்கள், 27.06.1999 முதல் 27.06.2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமானவா்கள் 27.06.1999 முதல் 27.06.2002 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சி முடித்து பணியில் சோ்ந்தவுடன் ஊதியம் ரூ.26,900 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பாா்த்து தோ்வு முறை மற்றும் தோ்வு நாளன்று எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆள்சோ்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள்  கொடுக்கப்பட்டுள்ள  படிவத்தை பூா்த்தி செய்யவும். இந்தப் படிவத்தை 9942503151 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் செய்தி அனுப்பியும் பெறலாம் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com