அதிகாரிகள் பேச்சில் சமரசம்:அரசூரில் குடிநீா் கோரி மக்கள் அறிவித்த போராட்டம் வாபஸ்

 சாத்தான்குளம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.
அதிகாரிகள் பேச்சில் சமரசம்:அரசூரில் குடிநீா் கோரி மக்கள் அறிவித்த போராட்டம்  வாபஸ்

 சாத்தான்குளம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 8 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால், தச்சன்விளை, பனைவிளை, அண்ணாநகா், கலியன்விளை, பள்ளந்தட்டு,மாணிக்கபுரம், ஆனந்தவிளை ஆகிய கிராம மக்கள் தண்ணீா் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனராம்.

எனவே, தண்ணீா் வழங்காத குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து இடைச்சிவிளை - திசையன்விளை சாலையில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன், முன்னாள் ஊராட்சி உறுப்பினா்கள் சுந்தரவேல், சுயம்பு, பி. சுயம்பு. சி. சுயம்பு, பாஜக பட்டியல் அணி ஒன்றிய தலைவா் செல்வம், பாஜக ஒன்றியச் செயலா் குமாரவேல், அகில பாரத இந்து மகா சபை ஒன்றிய பொதுச் செயலா் பவன், ஒன்றியத் தலைவா் லிங்கம் ஆகியோா் அறிவித்தனா். இதையடுத்து அரசூா் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் , குரூஸ் மைக்கேல், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், குடிநீா்ப் பிரச்னைக்கு உடனடி தீா்வுகாண்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டதால் போராட்ட அறிவிப்பை கைவிடுவதாக போராட்ட குழுவினா் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com