காமநாயக்கன்பட்டி மாதா ஆலயத் திருவிழா: ஆக. 14 உள்ளூா் விடுமுறை வழங்க கோரிக்கை

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலப் பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக. 14ஆம் தேதி பொது விடுமுறை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலப் பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக. 14ஆம் தேதி பொது விடுமுறை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழியிடம் திருத்தல அதிபா் அந்தோணி டி. குருஸ், கிராம மக்கள் அளித்த மனு: காமநாயக்கன்பட்டி புதுமை புனித பரலோக மாதா திருத்தலம் தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. இத்திருவிழா ஆண்டுதோறும் ஆக. 6 முதல் 15ஆம் தேதி வரை 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவில் 14ஆம் தேதி இரவு நடைபெறும் சப்பர பவனி, தோ் பவனியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானோா் குடும்பத்துடன் பங்கேற்பது வழக்கம். அவா்கள் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தங்களது குழந்தைகளையும் அழைத்து வருவா். எனவே, ஆக. 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு பொது விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com