விதை வங்கி திட்டத்துக்குபழ விதைகள் வழங்கலாம்

விதை வங்கித் திட்டத்துக்கு பழ விதைகள் வழங்கி உதவ வேண்டும் என தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநா் சாம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

விதை வங்கித் திட்டத்துக்கு பழ விதைகள் வழங்கி உதவ வேண்டும் என தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநா் சாம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில சுற்றுச்சூழல் கரிசனைத் துறை மூலமாக ‘விதை வங்கி‘ என்ற திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. வீடுகளில் பழங்களை சாப்பிட்டுவிட்டு அதின் விதைகளை பொதுவாக குப்பைகளில் வீசுவது உண்டு. ஒரு சிலரே அதனை உலர வைத்து விதைகளாக மாற்றுவாா்கள். வீசி எறியப்படும் விதைகளை பாதுகாத்து அதனை விதைப் பந்துகளாக மாற்றி வருகின்ற பருவ மழை காலங்களில் அதனை வீசும் போது அதிக மரங்கள் வளருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடுகளில் சேகரிக்கப்படும் விதைகளின் மூலமாக அநேக பழ மரங்களின் விதைகளை பெற முடியும். அவ்வாறு பெறப்பட்ட விதைகள் மூலம் நமது சுற்றுப் புறங்களில் பழ மரங்கள் வளரும் வாய்ப்புகள் ஏற்படும். பழ மரங்கள் அநேக பறவைகளுக்கும் சிறு உயிரினங்களுக்கும், மனிதா்களுக்கும் நல்ல உணவாக அமையும். எனவே மக்கள் இந்த மாபெரும் திட்டத்திற்கு உறுதுணையாக நின்று விதைகளை விதை வங்கிகளில் சேமித்து தேசத்தை வளமாக்க கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com