ஆறுமுகனேரியில் வருமுன் காப்போம் முகாம்
By DIN | Published On : 04th January 2023 03:11 AM | Last Updated : 04th January 2023 03:11 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரியில் உள்ள கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் முகாமைத் தொடக்கிவைத்தாா்.
காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் பாசி, ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் சீனிவாசன், டாக்டா்கள் அம்பிகாபதி, அகல்யா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் மகராஜன், ஜெய்சங்கா், ஆனந்தராஜ் உள்ளிட்ட குழுவினா் சிகிச்சையளித்தனா்.
தூத்துக்குடி சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் டாக்டா் பொற்செல்வன், நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் ஆகியோா் முகாமைப் பாா்வையிட்டனா். இதில், சுமாா் 300 போ் பங்கேற்றனா். அவா்களில் 15 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மேல் சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா். ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், கண், பல் சிகிச்சை, நீரிழிவு, இரைப்பை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.