வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா், கோட்டாட்சியா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது உருவச் சிலைக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை செயலா்
கிருஷ்ணசாமி, பொருளாளா் செண்பகராஜ், வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ.ராஜு தலைமையில் அதிமுகவினா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், ஒன்றிய மாணவரணிச் செயலா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், ஒன்றியச் செயலா் கணபதிபாண்டியன், மதிமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சிவபாண்டியன், பாஜக அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.