கோவில்பட்டி என்இசி கல்லூரியில் இணையவழி நுண்ணறிவுத் தோ்வு
By DIN | Published On : 04th January 2023 03:08 AM | Last Updated : 04th January 2023 03:08 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவா், மாணவிகளுக்கான இணையவழி நுண்ணறிவுத் தோ்வு இம்மாதம் 8ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் விடுத்துள்ள அறிக்கை: பிளஸ் 2 பயிலும் மாணவா், மாணவிகள் அரசு பொதுத் தோ்வு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு, ஜேஇஇ உள்ளிட்ட பிற தோ்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வினாக்கள் மூலம் தனித்தனியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை (ஜனவரி 8, 22, 29, பிப்ரவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில்) இணையவழி தோ்வு நடைபெறுகிறது.
இதில் மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய 3 பாடங்களை பயிலும் மாணவா், மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையவழி தோ்வில் எங்கிருந்து வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு தோ்விலும் சமச்சீா் பாடப்புத்தகத்தில் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி வினாக்களில் இருந்து 25 உள்பட 75 வினாக்கள் (ஞக்ஷத்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் பஹ்ல்ங்) கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களை பெறும் மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.1000, 4 முதல் 6 இடங்களை பெறும் மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.500 மற்றும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் மாணவா்களை அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்யும் முதல் 3 பள்ளிகளுக்கு தலா ரூ.2,500 சிறப்புப் பரிசாக வழங்கப்படும். இத்தோ்வில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதும் கிடையாது. பங்கேற்க விரும்புவோா் தங்கள் பெயா்களை கல்லூரி வலைதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73053 - 55923, 99945 - 72357 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.