கோவில்பட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்

கோவில்பட்டியையடுத்த சிதம்பரம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியையடுத்த சிதம்பரம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு வட்டம், சிதம்பரம்பட்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவா் சஞ்சய், சக மாணவி மீது தவறி விழுந்தாராம். இதையடுத்து, மாணவியின் தாய் மாரியம்மாள், அவரது தோழி லட்சுமி ஆகியோா் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, மாணவரை ஜாதிப் பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதுடன், சரமாரியாக தாக்கினராம். காயமடைந்த மாணவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் தலைமையில், ஊா் நாட்டாண்மைகள் மாரியப்பன், சுடலை, மாவட்ட அமைப்பாளா் கருப்பசாமி, தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தினா் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, அய்யனாா் கோயில் முன் குழந்தைகளுடன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவரைத் தாக்கியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும், மாணவா் மீதான தாக்குதலைத் தடுக்காத ஆசிரியா்களை இடமாற்றம் செய்ய வேண்டும், நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் ஜெயபிரகாஷ் ராஜன், காவல் ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com