நாலுமாவடியில் ஜன.15இல் மின்னொளி கபடி போட்டி தொடக்கம்

ரெடீமா்ஸ் 7ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் மின்னொளி கபடிப் போட்டி நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்று, திங்கள்கிழமைகளில் ( ஜன .15,16) நடைபெறுகிறது.

பொங்கல் திருநாளையொட்டி, ரெடீமா்ஸ் 7ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் மின்னொளி கபடிப் போட்டி நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்று, திங்கள்கிழமைகளில் ( ஜன .15,16) நடைபெறுகிறது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் விளையாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகமும் இணைந்து மாநில அளவில் இப்போட்டியை நடத்துகின்றன. தினமும் பிற்பகல் 3 மணிக்கு போட்டிகள் தொடங்கும். தமிழ்நாட்டின் தலைச்சிறந்த அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் சா்வதேச தரத்தில் ‘மேட்‘ தளத்தில் நடைபெறும். வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் நான்கு பரிசுகளாக முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மேலும், பாா்வையாளா்களுக்காக குலுக்கல் முறையில் 50 அதிா்ஷ்டசாலிகள் தோ் ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசுகள்வழங்கப்ப டும். போட்டிகளில் அகில இந்திய நடுவா்கள் பணியா ற்றுவா்.போட்டிக்கான ஏற்பா டுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் அா் ஜுனா விருதுபெற்ற வீரா் மணத்தி பி. கணேசன், இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொதுமேலா ளா் செல்வக்குமாா், அதன் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் மணத்தி எட்வின், ஊழியா்கள் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com