பொங்கல் திருநாள்:திருச்செந்தூா் கோயிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறப்பு

பொங்கல் திருநாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

பொங்கல் திருநாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

பொங்கல் திருநாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவே, கடந்த சில நாள்களாகவே இக்கோயிலில் பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் வேல்குத்தி, பால்குடம்- காவடி எடுத்தவாறு வருவதால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

பொங்கல் திருநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காணும் பொங்கல்: மறுநாள் திங்கள்கிழமை (ஜன. 16) காணும் பொங்கல் (திருவள்ளுவா் தினம்), 17-ஆம் தேதி உழவா் திருநாள், ஜன. 21-ஆம் தேதி தை அமாவாசை, ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய நாள்களில் அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com