உடன்குடியில் அதிமுக சாா்பில்1000 பேருக்கு நல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 22nd January 2023 04:34 AM | Last Updated : 22nd January 2023 04:34 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாளையொட்டி அதிமுக சாா்பில் உடன்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், 1000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி தலைவா் சி.குணசேகரன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா்கள் தாமோதரன், ராமச்சந்திரன், விஜயகுமாா், ஒன்றிய பொருளாளா் சங்கரலிங்கம், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணி செயலா் செல்வகுமாா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் பங்கேற்று 1000 பேருக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.
மாநில அமைப்புச் செயலா்கள் என்.சின்னத்துரை, சுதா கே.பரமசிவன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி செயலா் சிவசெல்வராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா், பேச்சாளா் முருகானந்தம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் மகாராஜா, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா்கள் ராஜதுரை, சிவநேசன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணை செயலா் மூா்த்தி, வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி துணைத் தலைவா் ராஜ்குமாா், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணி முன்னாள் செயலா் அமிா்தா மகேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.நகர செயலா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.