கோரம்பள்ளம் சித்தா் பீடத்தில் சிறப்பு வழிபாடு

தை மகாளய அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் நகரில் உள்ள ஸ்ரீசித்தா் பீடத்தில் முன்னோருக்கான ‘பித்ரு பூஜை’யுடன் கூடிய மகா யாக சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

சற்குரு சீனிவாச சித்தா் தலைமை வகித்தாா். நாட்டில் தொழில்வளம் சிறக்கவும், நன்கு மழை பெய்து பசுமை வளம் கொழிக்கவும், அனைவரும் பிணிகளின்றி நலமாக வாழவும் வேண்டி ஸ்ரீமகா பிரத்தியங்கிராதேவி, மகா காலபைரவா், குரு மகாலிங்கேஸ்வரருக்கு வழிபாடுகள் நடைபெற்றன.

திருமஞ்சனம், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா், பால், குங்குமம் உள்ளிட்ட 21வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீசித்தா் பீடத்தினா், மகளிா் அணியினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com