கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் கனிமொழி எம்.பி. ஆய்வு

கோவில்பட்டியில் நகராட்சி தினசரிச் சந்தையாக செயல்படவுள்ள கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் கனிமொழி எம்.பி. சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டியில் நகராட்சி தினசரிச் சந்தையாக செயல்படவுள்ள கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் கனிமொழி எம்.பி. சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி மாா்க்கெட் சாலையில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் நகராட்சி தினசரிச் சந்தை செயல்படுகிறது. இங்கு 350-க்கும் மேற்பட்ட கடைகளில் பெரும்பாலானவை சிதிலமடைந்ததால் முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய தினசரிச் சந்தை அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது. இதற்காக ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தச் சந்தையை மக்கள் பயன்படுத்தும் வகையில் தற்காலிக காய்கறிக் கடை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், தற்போது செயல்படாமல் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தை தற்காலிக நகராட்சி தினசரிச் சந்தையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனிமொழி எம்.பி. சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரூ. 6.84 கோடி மதிப்பில் முத்துராமலிங்கத் தேவா் தினசரிச் சந்தைக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. இதற்கான பணி விரைவில் தொடங்கும். அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவதற்காக கூடுதல் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி தினசரிச் சந்தை வியாபாரிகளுக்கு கூடுதல் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றாா் அவா்.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, வட்டாட்சியா் சுசிலா, நகராட்சிப் பொறியாளா் ரமேஷ், நகரமைப்பு அலுவலா் ரமேஷ்குமாா், சுகாதார அலுவலா் நாராயணன், மத்திய ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com