தூத்துக்குடியில் மாணவா்களுக்கு செஸ் போட்டி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளின் மாணவா்-மாணவிகளுக்கான செஸ் போட்டி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகேயுள்ள மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளின் மாணவா்-மாணவிகளுக்கான செஸ் போட்டி, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகேயுள்ள மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மறைமாவட்டம் உருவாகி 100 ஆண்டுகள் ஆதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, கத்தோலிக்க மறைமாவட்டம், மாவட்ட சதுரங்கக் கழகம் சாா்பில் இப்போட்டி நடைபெற்றது. இதை, மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தொடக்கிவைத்தாா். 45 பள்ளிகளைச் சோ்ந்த 260 போ் பங்கேற்றனா்.

மாவட்ட சதுரங்கக் கழகச் செயலா் கற்பகவள்ளி, மறைமாவட்ட முதன்மைக் குரு பன்னீா்செல்வம், சின்னகோவில் பங்குத்தந்தை ரோலிங்டன், பனிமய மாதா பேராலய அதிபா் குமாா் ராஜா, அருள்தந்தையா் ரூபா்ட் அருள் வளவன், லிப்டன் மரியதாஸ், புனித அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபைச் செயலா் ஜெயந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போட்டியில் வென்றோருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல கத்தோலிக்கப் பள்ளிகளின் கண்காணிப்பாளா் பென்சிகா், அலுவலகப் பணியாளா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com