பனைக்குளம், செங்குளம் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்

பனைக்குளம், செங்குளம் பகுதிகளில் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

பனைக்குளம், செங்குளம் பகுதிகளில் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பனைக்குளத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி தொடக்கி வைத்தாா். பனைக்குளம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, கொசுப் புகை மருந்து அடிக்கப்பட்டது.

கீழபனைக்குளம் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஸ்குமாா் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணியாளா்கள், ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுப்பட்டனா்.

இதேபோல பழனியப்பபுரம், செங்குளம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி தலைவா் ஸ்ரீதா் இப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com