நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 24th January 2023 01:39 AM | Last Updated : 24th January 2023 01:39 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் மற்றும் தேவா் இளைஞரணி சாா்பில் செல்லப்பாண்டியன் தெருவில் உள்ள கோயில் திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேதாஜியின் உருவப்படத்திற்கு மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் ஆகியோா் மாலையணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த இசக்கிபாண்டி, முருகேசப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.