வாக்காளா் தின பாட்டுப் போட்டி:சாத்தான்குளம் கல்லூரி மாணவி சிறப்பிடம்
By DIN | Published On : 26th January 2023 12:37 AM | Last Updated : 26th January 2023 12:37 AM | அ+அ அ- |

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான பாட்டுப் போட்டியில் 3ஆம் இடம் வென்ற சாத்தான்குளம் கல்லூரி மாணவிக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பரிசு வழங்கினாா்.
வருவாய்த் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு பாட்டு உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பாட்டுப் போட்டியில் சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவி சினேகா மாவட்ட அளவில் 3ஆம் பரிசு வென்றாா். அவருக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கினாா்.
மாணவியை கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜமுனாராணி, ஆங்கிலத் துறைத் தலைவா் பேராசிரியா் ஆனந்தி, உதவிப் பேராசிரியா் வளா்மதி, தமிழ்த் துறைப் பேராசிரியா் சீதாலட்சுமி, பெற்றோா்-ஆசிரியா் கழகப் பேராசிரியை சங்கீதா உள்ளிட்ட அனைத்துத் துறைப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.