ரூ.71 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.71 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ரூ.71 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.71 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற புதிய திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கு, மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். திட்டப் பணிகளைத் திறந்து வைத்து அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்திற்கென ரூ.899.95 கோடியில் குடிநீா்த் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில திட்டங்கள் முடியும் நிலையில் உள்ளன. மேலும் சில திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்திலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் கிடைப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூா், காயல்பட்டினம் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் சாலை வசதிகள் சீராக செய்து கொடுக்கப்படும். பொலிவுறு நகா் திட்டத்தில் பேருந்து நிலையம், வணிக வளாகம் ஆகியவை விரைவில் திறக்கப்படும் என்றாா்.

சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ் ஆகியோா் பேசினா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஷிவ் தாஸ் மீனா, தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மாா்கண்டயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையா் தினேஷ் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com