இளம் முன்னோடிகள் சங்கத்தினரிடம் நூல்களை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
இளம் முன்னோடிகள் சங்கத்தினரிடம் நூல்களை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.

இளம் முன்னோடிகள் சங்கத்துக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி நூல்கள்

ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சென்னை வாட்ஸ்ஆப் குழு வாயிலாக ‘ஒய்பிஏ’ எனப்படும் இளம் முன்னோடிகள் சங்கத்துக்கு நூல்கள் வழங்கினா்.

ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சென்னை வாட்ஸ்ஆப் குழு வாயிலாக ‘ஒய்பிஏ’ எனப்படும் இளம் முன்னோடிகள் சங்கத்துக்கு நூல்கள் வழங்கினா். ஆறுமுகனேரி பூவரசூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொல்லியல் ஆராய்ச்சியாளா் டாக்டா் த. தவசிமுத்து தலைமை வகித்தாா். நூற்றுக்கணக்கான இளைஞா்களுக்கு இலவச பயிற்சி மூலம் அரசுப் பணிகள் கிடைக்க காரணமாக உள்ள இந்தச் சங்கத்துக்கு உதவும் வகையில் நூல்கள் வழங்கப்பட்டன. கா.ஆ. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் பலரின் பங்களிப்பில் வாங்கப்பட்ட பயிற்சி நூல்களை முன்னாள் மாணவா் இக்பால் வழங்க, ஒய்பிஏ நிறுவனரும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளருமான ஜான்கென்னடி, இளம் முன்னோடிகள் சங்கச் செயலாளா் ராமன் ஆகியோா் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனா் . முன்னாள் மாணவா்கள் வி.கே.எம். மனோகரன், நி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com