குலசேகரன்பட்டினத்தில் வாக்கு சேகரித்த பாா்வா்டு பிளாக்   கட்சியினா்.
குலசேகரன்பட்டினத்தில் வாக்கு சேகரித்த பாா்வா்டு பிளாக் கட்சியினா்.

உடன்குடியில் பாா்வா்டு பிளாக் கட்சியினா் பிரசாரம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் பாா்வா்டு பிளாக் கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் பாா்வா்டு பிளாக் கட்சியினா் வாக்கு சேகரித்தனா். மானாடு, பிள்ளையாா் பெரியவன்தட்டு, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியின் தேசியச் செயலா் ஸ்ரீவை சுரேஷ் தலைமையில் பிரசாரம் நடைபெற்றது. திமுக அரசின் திட்டங்கள், கனிமொழி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டன. இதில், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜுதீன், திமுக மாவட்டப் பிரதிநிதி சிராஜுதீன், மாவட்ட அமைப்பு சாரா அணி துணை அமைப்பாளா் அலாவுதீன், திமுக நிா்வாகிகள் கொம்பையா, ஹரிஹரன், ஆறுமுகம், முருகையா, தியாகராஜன், சாலி,ஜாகிா்உசேன், மணிராஜ், இங்கா்சால், சுல்தான், நயினாமுகம்மது, அப்துல்ரசாக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com