குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா நாளை தொடக்கம்

குலசேகரன்பட்டினம் வடக்கூா் அருள்மிகு வீரமனோகரி அம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா புதன்கிழமை (ஏப்.3) தொடங்கி பத்து நாள்கள் நடைபெறுகிறது.

குலசேகரன்பட்டினம் வடக்கூா் அருள்மிகு வீரமனோகரி அம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா புதன்கிழமை (ஏப்.3) தொடங்கி பத்து நாள்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புதன்கிழமை காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலை,மாலையில் சுவாமி திருவீதியுலா நடைபெறும். ஏப்.12 ஆம் தேதி விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் அ.வீரபாகு வல்லவராயா் செய்து வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com