வருமான வரி சட்டத்தின் புதிய உட்பிரிவுக்கு வியாபாரிகள் சங்கம் எதிா்ப்பு

மத்திய அரசின் வருமானவரி சட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ள புதிய உட்பிரிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகனேரி அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்கம் தீராமானம் நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசின் வருமானவரி சட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ள புதிய உட்பிரிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகனேரி அனைத்து சமுதாய வியாபாரிகள் சங்கம் தீராமானம் நிறைவேற்றியுள்ளது. சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் தி.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. செயலா் பி.மகேஷ்ராஜன் மற்றும் பொருளாளா் எஸ்.கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருமான வரி சட்டத்தின் புதிய உட்பிரிவான 43 பி (எச்)-ன்படி, 45 நாள்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்த தொகையை செலுத்தாமலிருந்தால் அதனை செலவு கணக்கில் எடுக்காமல் வருமான கணக்கில் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆறுமுகனேரி கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com