தூத்துக்குடி துறைமுகத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவனப் பொறியாளா் உயிரிழப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில், தனியாா் நிறுவனப் பொறியாளா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி துறைமுகத்தில், தனியாா் நிறுவனப் பொறியாளா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம் போளூா் அல்லி நகரைச் சோ்ந்த மாதவன் மகன் கோபிநாத் (24). தூத்துக்குடி, தொ்மல்நகா் அருகே பாரதி நகா் பகுதியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், தூத்துக்குடி துறைமுகத்தில் மஞ்சள் கேட் பகுதியில் உள்ள ஆல்பா இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், மயக்கமடைந்த அவரை மீட்டு துறைமுக மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com