அணைத்தலை தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

அணைத்தலை தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

சாத்தான்குளம் அருகேயுள்ள அணைத்தலை தூ.நா.நி.அ.க. தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை மாணவா்கள் ஏந்தியபடி பங்கேற்றனா். இதில், பள்ளித் தலைமையாசிரியை ம. கோகிலாதங்கம், உதவிஆசிரியை ஜா. ஜெயக்குமாரி, சத்துணவு உதவியாளா் புனிதா, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ரா. கெஞ்சியான், ஊராட்சி மன்ற உறுப்பினா் செ. கிறிஸ்டி, இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா் ஜெ. ஜூலியட், ஊா்ப் பெரியவா்கள் கமலம், ஜெயசீலி, செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com