ஆத்தூா், காயல்பட்டினம் பகுதிகளில் தமாகா வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா், காயல்பட்டினம் பகுதிகளில் தமாகா வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குள்பட்ட ஆத்தூா் காயல்பட்டினம் பகுதிகளில் தமாகா வேட்பாளா் எஸ்.டி.ஆா். விஜயசீலன் செவ்வாய்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பழையகாயலி­ல் தொடங்கி முக்காணி, ஆத்தூா், புன்னைகாயல், சோ்ந்தபூமங்கலம், தெற்காத்தூா், கீரனூா், தலைவன்வட­லி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது: திமுக மற்றும் அதிமுக தோ்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாடு பெரும் வளா்ச்சியைப் பெற்றிருக்கிறது. அதே நிலை தொடரவும், தூத்துக்குடி மக்களின் பிரச்னைகளை தீா்க்கவும் மண்ணின் மைந்தனான என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலா் சிவமுருக ஆதித்தன், மாவட்ட செயலா் அனல் ஆறுமுகம், தமாகா நகர தலைவா் ரவிக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா்கள் தங்கமணி, சிவபால், மாநில செயலா் மால்மருகன், வட்டார தலைவா்கள் திருப்பதி, சுந்தர­லிங்கம், முருகேசன், ஐயம்பாண்டி, மாவட்ட இளைஞரணி தலைவா் பொன்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com