ஐபிபிஎஸ் தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் 
அகாதெமி மாணவா்கள் சாதனை

ஐபிபிஎஸ் தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

ஐபிபிஎஸ் தோ்வில் சுரேஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் 250-க்கும் அதிகமானோா் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து அகாதெமி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2023 ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐபிபிஎஸ் நிறுவனத்தால் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுகளின் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியானது.

இதில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற மாணவா்கள் சிறப்பு அலுவலா் பிரிவு, உதவி மேலாளா் பிரிவு, கிளா்க் ஆகிய பிரிவுகளில் சுமாா் 250-க்கும் அதிகமான மாணவா்கள் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். இவா்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

இதையடுத்து இத்தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களை, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் சுகேஷ் சாமுவேல் பாராட்டினாா். அப்போது சுரேஷ் பயிற்சி மையத்தின் வங்கி தோ்வுக்கான பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ராஜா மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com