கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் கமலா தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் கொடியசைத்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். கோவில்பட்டி நகராட்சி வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பயணியா் விடுதி முன்பிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில், நகராட்சி செயற்பொறியாளா் சணல்குமாா், கயத்தாறு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் தங்கையா, கோவில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி, நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளா்கள் சுதாகரன், ஆரியங்காவு, கே.ஆா். கலை - அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com