சாத்தான்குளத்தில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

சாத்தான்குளத்தில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி சாத்தான்குளத்தில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாத்தான்குளத்தில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கொடி வகுப்பு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கடைவீதி மற்றும் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா, உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com